எல்லா இடங்களிலும் உள்ள மக்களை தங்கள் குடும்பத்துடன்-தலைமுறை தலைமுறையாக இணைக்க நாங்கள் தூண்டுகிறோம்.

FamilySearch Office, Lehi, Utah, USA
அனைவருக்கும் இலவசம்
பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் சபை, மரபு, கலாச்சாரம் அல்லது மதச் சார்பு எதையும் பாராமல், அனைவருக்கும் FamilySearch-ஐ இலவசமாக வழங்குகிறது. FamilySearch ஆதாரங்கள், உலகம் முழுவதும் உள்ள இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் மரபை கண்டறியவும், குடும்ப உறுப்பினர்களுடன் இணையவும் உதவுகின்றன.
நாங்கள் என்ன செய்கிறோம்?
எங்கள் இணையதளம், கைபேசி செயலிகள் மற்றும் 5,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் குடும்ப வரலாற்று மையங்களில் வழங்கப்படும் நேரடி உதவி ஆகியவற்றின் மூலம், மக்கள் தங்கள் குடும்ப வரலாற்றைக் கண்டறிய நாங்கள் உதவுகிறோம்.

உலகளாவிய ஒத்துழைப்பு
FamilySearch, உள்ளூர் சட்டங்களுக்கு உட்பட்டு, முக்கியமான குடும்ப ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றை இணையத்தில் இலவசமாகக் கிடைக்கச் செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. எங்கள் பணி உலகளாவியது; இது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 10,000-க்கும் மேற்பட்ட அமைப்புகளுடனான ஒத்துழைப்புகளை உள்ளடக்கியுள்ளது. FamilySearch எப்போதும் உள்ளூர் சட்டங்களுக்கு இணங்கி நடக்க முயல்கிறது.


















