FamilySearch இடங்களின் வகைகள்

FamilySearch மையங்கள்
FamilySearch மையங்கள் உங்கள் வம்சாவளி வரலாற்றையும் குடும்ப வரலாற்றையும் ஆய்வு செய்வதற்கான கருவிகளையும் ஆதார வளங்களையும் வழங்குகின்றன. அவை தனிப்பயனாக்கப்பட்ட உதவி, கணினிகள் மற்றும் பிரீமியம் குடும்ப வரலாற்று வலைத்தளங்களுக்கான அணுகல், மற்றும் வேறு எங்கும் கிடைக்காத வரலாற்றுப் பதிவுகளின் படங்களை வழங்குகின்றன.

இணை நூலகங்கள்
FamilySearch இணைப்பு நூலகங்கள், FamilySearch மையத்தில் உள்ளது போன்ற ஆதார வளங்களை வழங்குகின்றன; உதாரணத்திற்கு, FamilySearch-இன் விரிவான டிஜிட்டல் வம்சாவளித் தொகுப்புகளை அணுகும் வசதியை இவை வழங்குகின்றன. பொது நூலகங்கள் அல்லது உயர் கல்வி நூலகங்கள், காப்பகங்கள், அருங்காட்சியகங்கள், பண்பாட்டு மையங்கள் அல்லது வம்சாவளி / வரலாற்று சமூகங்கள் ஆகியவை இணை நூலகங்களாகச் செயல்படலாம்.

FamilySearch நூலகம்
யூட்டாவின் சால்ட் லேக் சிட்டியில் அமைந்துள்ள FamilySearch நூலகம் உலகின் மிகப்பெரிய வம்சாவளி ஆய்வு மையங்களில் ஒன்றாகும். பயிற்சி பெற்ற ஆராய்ச்சிப் பணியாளர்கள் இருப்பதுடன், பரந்த அளவிலான வம்சாவளிப் பதிவுகள், நூல்கள், நுண்படிம படலங்கள் மற்றும் டிஜிட்டல் வளங்களின் தொகுப்புக்கான இலவச அணுகலையும் இது வழங்குகிறது. நூலகம் பொதுமக்களுக்கு இலவசமாகத் திறந்திருக்கும், மேலும் அதன் சில ஆதார வளங்கள் இணையத்திலும் கிடைக்கின்றன.
FamilySearch அணுகல்தேவாலய கட்டிடங்களில் பிரீமியம் உள்ளடக்கம்
பிற்காலப் பரிசுத்தவான்களின் ��யேசு கிறிஸ்து சபையின் எந்தவொரு கூடுகைக் கூடத்திலும் உங்கள் சொந்த கணினியிலிருந்து FamilySearch மையத்தின் பிரீமியம் உள்ளடக்கத்தை நீங்கள் அணுகலாம். Google Chrome அல்லது Mozilla Firefox-இல் FamilySearch மைய பிரீமியம் உள்ளடக்கம் எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து நிறுவவும்.
