FamilySearch Home

அணுகல்தன்மைக்கான எங்கள் அர்ப்பணிப்பு

மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து தனிநபர்களுக்கும் எங்கள் வம்சாவளி ஆதாரங்கள் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் அர்ப்பணித்துள்ளோம்.

அடிப்படையிலிருந்தே அணுகல்

FamilySearch தனது இணையதளம் மற்றும் செயலிகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் அணுகலை ஒருங்கிணைக்கிறது. எங்கள் தளங்கள் உணரக்கூடியவை, செயல்படக்கூடியவை, புரிந்துகொள்ளக்கூடியவை மற்றும் பெரிதானனவை என்பதை உறுதிசெய்ய, இணைய உள்ளடக்க அணுகல் வழிகாட்டுதல்களுடன் (WCAG) சீரமைக்க முயற்சிப்போம். மேம்பாட்டிற்கான பகுதிகளை அடையாளம் காணவும், உலகெங்கிலும் உள்ள குடும்பங்களுக்கு சிறப்பாகச் சேவை செய்ய எங்கள் டிஜிட்டல் கருவிகளை தொடர்ந்து மேம்படுத்தவும் பயனர்களின் கருத்தை நாங்கள் தீவிரமாகத் தேடுகிறோம்.

அணுகல் அம்சங்கள்

பல்வேறு தேவைகளை ஆதரிப்பதற்காக, FamilySearch பின்வரும் அம்சங்களை வழங்குகிறது:

  • பார்வையற்ற அல்லது பார்வைத்திறன் குறைந்த பயனர்களுக்கான திரை வாசிப்பான் இணக்கத்தன்மை.
  • இயக்கக் குறைபாடுள்ள பயனர்களுக்கான விசைப்பலகை வழிச் செயல்பாட்டு ஆதரவு.
  • கேட்கும் திறன் குறைபாடுள்ள பயனர்களுக்காக, காணொளி உள்ளடக்கத்தில் சேர்க்கப்படும் வசனங்கள்.
  • வம்சாவளி பதிவுகள் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அணுகக்கூடிய வடிவங்கள்; இதில், உரை வடிவமுள்ள பதிவு படங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நாங்கள் எப்படிச் செயல்படுகிறோம்?

எங்கள் இணையதளம் அல்லது செயலிகளைப் பயன்படுத்தும்போது அணுகல் தொடர்பான சவால்களை நீங்கள் எதிர்கொண்டாலோ அல்லது பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் இருந்தாலோ, support@FamilySearch.org என்ற முகவரியில் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்கள் கருத்துக்கள், FamilySearch.org தளத்திற்கு வரும் அனைவருக்கும் இந்தத் தளத்தை மேம்படுத்த எங்களுக்கு உதவுகின்றன.

ஆதரவைத் தொடர்பு கொள்க