உங்கள் குடும்பத்தின் பழைய புகைப்படங்கள் அழிந்துபோகும் முன் அவற்றை பத்திரப்படுத்துங்கள்
ஒவ்வொருவரிடமும் அலமாரிகள், ஆல்பங்கள் மற்றும் பரண்களில் மறைத்து வைக்கப்பட்ட பழைய குடும்பப் புகைப்படங்கள் இருக்கும். உங்கள் முன்னோர்களின் புகைப்படங்கள், கதைகள் மற்றும் ஆவணங்களை வரும் தலைமுறையினரும் பார்த்து மகிழும் வகையில் எளிதாகப் பாதுகாக்கவும், வரிசைப்படுத்தவும், பகிர்ந்துகொள்ளவும் 'FamilySearch' உதவுகிறது.
இது எப்படி செயல்படுகிறது
ஒரு சில படிகளில், பழைய குடும்பப் புகைப்படங்களைப் பாதுகாக்கப்பட்ட குடும்ப நினைவுகளாக மாற்றுங்கள்.
பழைய குடும்பப் புகைப்படத்தைப் பதிவேற்றுதல்
மங்கியதாக, கிழிந்ததாக அல்லது பழைய தொகுப்புக்குள் வைக்கப்பட்டதாக இருந்தாலும் சரி, ஏதேனும் ஒரு பழைய குடும்பப் புகைப்படத்தைப் படம் எடுங்கள் அல்லது வருடல் செய்து கொள்ளுங்கள்.
பெயர்கள் மற்றும் விவரங்களைச் சேர்த்தல்
புகைப்படத்தில் உள்ள நபர்களைக் குறியிடவும், தேதிகள், இடங்கள் மற்றும் கதைகளைச் சேர்க்கவும்; மேலும், அந்தப் புகைப்படத்தைச் சரியான முன்னோர்களுடன் இணைக்கவும்.
உங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும்
உங்கள் புகைப்படம் பதிவேற்றப்பட்டதும், உறவினர்கள் அதைக் கண்டறிந்து, மகிழ்ந்து, உங்கள் பகிரப்பட்ட குடும்பக் கதையில் மேலும் பல தகவல்களைச் சேர்க்கலாம்.

வெறும் புகைப்படங்கள் மட்டுமல்ல
FamilySearch நினைவுகள் புகைப்படங்களை மட்டுமன்றி அதற்கும் மேலானவற்றைப் பாதுகாத்திட உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் குடும்ப வரலாற்றிற்கு உயிர் கொடுக்கும் கதைகள், ஆவணங்கள் மற்றும் குரல் பதிவுகளையும் நீங்கள் இதில் சேர்க்கலாம்.
புகைப்படங்கள்
அவை ஸ்கேன் செய்யப்பட்டதாகவோ, புகைப்படம் எடுக்கப்பட்டதாகவோ அல்லது ஏற்கனவே டிஜிட்டல் வடிவத்தில் இருந்தாலும் சரி, உங்கள் குடும்பத்தினர் மற்றும் முன்னோர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றுங்கள்.
ஆவணங்கள்
ஸ்கேன் செய்யப்பட்ட கடிதங்கள், நாட்குறிப்புகள், சான்றிதழ்கள், சமையல் குறிப்புகள், ராணுவ ஆவணங்கள் மற்றும் பிற குடும்பப் பதிவுகளைப் பாதுகாத்திடுங்கள்.
கதைகள்
உங்கள் முன்னோர்கள் யார், அவர்களுக்கு எது முக்கியமாக இருந்தது என்பதை விளக்கும் குடும்பக் கதைகள், நினைவுகள் மற்றும் விவரங்களை உள்ளிடவும்.
ஒலிநாடாக்கள்
பெற்றோர்கள், தாத்தா-பாட்டிகள் மற்றும் உறவினர்கள் தங்களது கதைகளைத் தங்களின் சொந்தக் குரலில் விவரிப்பதைப் பதிவுசெய்யுங்கள் அல்லது பதிவேற்றுங்கள்.
படத்தொகுப்புகள்
தொடர்புடைய நினைவுகளின் தொகுப்புகளுக்கு படத்தொகுப்பை பயன்படுத்தவும்.
இன்றே தொடங்கவும்
உங்கள் விலைமதிப்பற்ற நினைவுகளைப் பாதுகாக்கவும் பகிரவும் இந்த சிறந்த அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
FamilySearch நினைவுகளை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?
பல செயலிகளால் புகைப்படங்களைச் சேமிக்க முடியும். வேறெந்தச் சேவையாலும் செய்ய முடியாத வழிகளில், குடும்ப வரலாற்றைப் பாதுகாப்பதற்காகவே FamilySearch நினைவுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலவசமானது மற்றும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்படுகிறது
உங்கள் குடும்பத்தினர் எங்கு வாழ்ந்தார்கள் என்பது பற்றிய முக்கியமான விவரங்களை வரலாற்று பதிவேடுகள் பெரும்பாலும் வெளிப்படுத்தக்கூடும்.
மக்களையும் கதைகளையும் மையமாகக் கொண்டு ஒழுங்கமைக்கப்பட்டது
ஒரு சாதாரண புகைப்பட செயலி போலல்லாமல், FamilySearch உங்களது புகைப்படங்கள், ஆவணங்கள், கதைகள் மற்றும் ஒலிப் பதிவுகளை உங்கள் குடும்ப மரத்தில் உள்ள நபர்களுடன் நேரடியாக இணைக்கிறது.
பகிரப்பட்ட குடும்ப மரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது
உங்களது தூரத்து உறவினர் ஒருவர், ஏற்கனவே உங்கள் முன்னோரைப் பற்றிய புகைப்படம், கதை அல்லது பதிவை இதில் பதிவேற்றியிருக்கலாம்.
பாதுகாப்பானது மற்றும் குடும்பத்திற்கு உகந்தது
FamilySearch கண்ணியமான உள்ளடக்கக் கொள்கைகளைப் பின்பற்றுவதோடு, தற்போது உயிரோடிருக்கும் நபர்களின் நினைவுகளைத் தனிப்பட்டதாக வைத்திருக்கிறது.
கட்டுப்பாடு எப்போதும் உங்களிடமே இருக்கும்
உங்களது நினைவு பொதுவானதா, தனிப்பட்டதா அல்லது குழுவோடு பகிரப்பட வேண்டுமா என்பதைத் தேர்வு செய்யவும். FamilySearch உங்கள் தரவை விற்பனை செய்வதில்லை.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உங்கள் பழைய குடும்பப் புகைப்படங்களை மறைத்து வைக்காதீர்கள்!
உங்கள் புகைப்படங்களுக்குப் பின்னால் உள்ள கதைகள் முக்கியமானவை! உங்கள் தலைமுறையினர் அதனை மகிழ்ந்து கொண்டாட, இப்பொழுதே அவற்றை ஆவணப்படுத்திப் பாதுகாத்திடுங்கள்.