FamilySearch Home
ஈடுபடவும்

ஈடுபடவும்

உலகெங்கிலும் உள்ள ஆய்வாளர்களுக்கு உதவவும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும் இந்த செயல்பாட்டை முயன்று பாருங்கள்.

அட்டவணைப்படுத்தல் என்றால் என்ன?

அட்டவணைப்படுத்தல் என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் அல்லது இறப்பு அறிவிப்புகள் போன்ற வரலாற்றுப் பதிவுகளின் படங்களை இணையத்தில் தேடக்கூடிய வகையில் மாற்றும் ஒரு தன்னார்வத் திட்டமாகும். வம்சாவளி ஆய்வுச் சமூகத்திற்குப் பங்களிப்பதற்கும், குடும்பம் சார்ந்த புதிய தகவல்களைக் கண்டறிவதை சாத்தியமாக்குவதற்கும் இது ஒரு சிறந்த வழியாகும்.

இது எவ்வாறு செயல்படுகிறது

வரலாற்றுப் பதிவின் அட்டவணைப்படுத்தப்படாத ஒரு படத்தை தேடலில் கண்டறிய முடியாது. இதனுடன் தொடர்புடைய முக்கியச் சொற்கள் எதுவும் காணப்படவில்லை.

ஒரு தன்னார்வ அட்டவணைப்படுத்துபவர், அட்டவணைப்படுத்தல் நிகழ்ச்சியில் உள்ள பதிவைப் பார்த்து, பெயர்கள், தேதிகள் மற்றும் இடங்கள் போன்ற முக்கியமான தகவல்களைத் தட்டச்சு செய்கிறார். இதன் விளைவாக உருவாக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட படம், FamilySearch-இல் இலவசமாகக் கிடைக்கும் தேடக்கூடிய பதிவுகளுடன் சேர்க்கப்படுகிறது.

அட்டவணைப்படுத்தல் என்பது, பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையால் வழங்கப்படும் ஒரு சேவையான FamilySearch மூலம் நிதியுதவி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இதை முயன்று பாருங்கள்

FamilySearch -இல் உள்நுழைந்து, அட்டவணைப்படுத்தல் பணி செய்வதற்கான படங்களின் தொகுப்பைத் தேர்ந்தெடுக்க, அட்டவணைப்படுத்தல் முகப்புப் பக்கத்தைப் பார்வையிடவும். பல்வேறு மொழிகளில் திட்டங்கள் உள்ளன. உங்களிடம் உள்ள நேரத்திற்கு ஏற்ப, எவ்வளவு வேண்டுமானாலும் அல்லது எவ்வளவு குறைவாக வேண்டுமானாலும் நேரத்தைச் செலவிடுங்கள். கேள்விகளுக்குப் பதிலளிக்க உதவும் ஆதாரங்கள் அமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.