FamilySearch Home
குடும்ப மரத்தை உருவாக்குங்கள்

குடும்ப மரத்தை உருவாக்குங்கள்

FamilySearch-இல் உங்கள் குடும்ப மரத்தின் கிளைகளை ஆவணப்படுத்த, இந்த நிகழ்ச்சிகளை முயன்று பாருங்கள்.

மரம் என்றால் என்ன?

இது குடும்ப வம்சாவளிகளின் வளர்ந்து வரும் ஒரு தொகுப்பாகும். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பல ஆண்டுகளாகத் தங்கள் கிளைகளைச் சேர்த்து வருகின்றனர்.

முதல் படிகள்

உங்கள் பெற்றோரில் தொடங்கி, உயிருடன் இருக்கும் மற்றும் உங்களால் முடிந்தவரை பின்னோக்கி மரித்த உறவினர்களைச் சேர்க்கவும். வயது முதிர்ந்த உறவினர் ஒருவருக்குச் செய்யப்படும் ஒரு சிறிய தொலைபேசி அழைப்பு அல்லது குறுஞ்செய்தி, சில இடைவெளிகளை நிரப்ப உங்களுக்கு உதவக்கூடும்.

குறிப்பு: மரித்தவர்களை நோக்கிப் பின்னோக்கிச் செல்லும்போது, உயிருடன் இருப்பவர்களைச் சேர்ப்பது குறித்துக் கவலைப்பட வேண்டாம். உயிரோடிருக்கும் நபர்கள் குறித்த தகவல்கள், தனிப்பட்டதாக வைக்கப்பட்டிருக்கும்.

மரத்தில் நபர்களைச் சேர்த்தல்

மர அமைப்பில் ஒருவரைச் சேர்க்க (+) பொத்தானைத் தேர்ந்தெடுக்கவும்.

அந்த நபரின் பெயர் மற்றும் பிறந்த அல்லது இறந்த தேதிகள் மற்றும் இடங்களைச் சேர்க்கவும். உங்களுக்குத் தெரிந்த அல்லது நீங்கள் கண்டறியக்கூடிய எதுவாக இருந்தாலும் சரி. பிறகு அடுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

சமுதாயக் குடும்ப மரத்துடன் இணையுங்கள்

நீங்கள் மரத்தில் பெயர்களைச் சேர்க்கும்போது, நாங்கள் பொருத்தங்களைத் தேடுவோம். எனவே, உங்கள் மரித்த பாட்டி ஏற்கனவே அந்த மரத்தில் இடம்பெற்றிருந்தால், நாங்கள் அவரைக் கண்டறிந்து அதற்கான இணைப்பை ஏற்படுத்துவோம். பொருத்தங்களைக் கண்டறிவது ஒரு பொதுவான விஷயம்; உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக வழங்கிய பங்களிப்புகளைக் கொண்டே இந்தச் சமூகக் குடும்ப மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

பதிவு தொடர்பான குறிப்புகளைக் கவனியுங்கள்.

குடும்ப மரத்தில் சாத்தியமான முன்னோரின் பொருத்தங்களைத் தேடுவதோடு மட்டுமல்லாமல், நீங்கள் சேர்க்கும் மரித்த முன்னோர்கள் குறித்த தகவல்களுக்காக எங்கள் வரலாற்றுப் பதிவுத் தொகுப்பிலும் நாங்கள் தேடுவோம். அது ஒரு பொருத்தத்தைக் கண்டறியும்போது, நாங்கள் உங்களுக்கு ஒரு குறிப்பைக் காட்டுவோம். தோன்றும் நீல நிறச் சின்னத்தைக் கொண்டு ஒரு குறிப்பை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

குடும்ப மரத்துக்குச் சென்று தொடங்க, அந்த இணைப்பைப் பின்தொடரவும். உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தாலோ அல்லது இது எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பினாலோ, பக்கத்தின் மேல் பகுதியில் உள்ள (?) சின்னத்தைத் தட்டவும்.

குறிப்பு: குறிப்புகள் பொருந்துகின்றனவா என்று பார்க்க அவற்றைச் சரிபார்க்கவும். அப்படியானால், குடும்ப மரத்தில் புதிய கிளைகளைச் சேர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும்.