பதிவுகளில் முன்னோர்களைக் கண்டறியவும்
பதிவுகள் புதிய விவரங்களை வெளிக்கொணரவும், ஒரு குறிப்பிட்ட முன்னோர் குறித்த வரலாற்றுத் தடத்தை உருவாக்கவும் உதவக்கூடும்.
முன்னோர் தேடலின் அடிப்படைகள்
வரலாற்றுப் பதிவு தரவுத்தளத்தில் உங்கள் முன்னோர்களைத் தேடுவது, கூகுளில் தேடுவதைப் போன்றது. நீங்கள் தேட விரும்பும் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவலை உள்ளிடுகிறீர்கள். பின்னர் தேடல் எந்திரம் சிறந்த பொருத்தங்களைக் கண்டறிய தரவுகளின் பெருங்குவியல்களை சல்லடை செய்கிறது.
முன்னோர்களைத் தேடும்போது, அந்த நபரின் பெயர் மற்றும் அவர் வாழ்ந்த, இறந்த இடங்கள் மற்றும் காலங்கள் போன்ற தகவல்களை உள்ளிடுவது நல்லது. வாழ்க்கைத் துணை, பெற்றோர் அல்லது குழந்தைகள் போன்ற உறவுமுறைகளைக் குறிப்பிடும் வசதி இருப்பதும் பயனுள்ளதாக இருக்கும்.
உங்களுக்குத் தெரிந்த அல்லது உறவினர்களிடமிருந்து கண்டறியக்கூடிய தகவல்களை உள்ளிடவும். எல்லாம் தெரியவில்லை என்று கவலைப்பட வேண்டாம்; மிகக் குறைந்த தகவலைக் கொண்டே தேடலை மேற்கொள்ள முடியும்.
அடுத்து என்ன செய்வது
குடும்பக் கதை குறித்த விவரங்களைச் சேகரிக்க வரலாற்றுப் பதிவுகள் உங்களுக்கு உதவுகின்றன. அவை முகவரிகள், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் உயரம், கண் நிறம், தொழில் போன்ற தனிப்பட்ட விவரங்கள் அடங்கிய முக்கியமான அல்லது சுவாரஸ்யமான தகவல்களை வழங்க முடியும். உங்கள் முன்னோரின் கையொப்பத்தைக் கூட நீங்கள் கண்டறியலாம்.
முன்னோர்களைப் பற்றி நீங்கள் கண்டறிந்தவற்றை, குடும்ப மரத்தில் உள்ள அவர்களின் சுயவிவரத்தில் சேமிக்கவும். நீங்கள் சேமிப்பவை பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அதே தகவலைத் தேடிக்கொண்டிருக்கக்கூடிய உறவினர்களுடன் தானாகவே பகிரப்படும். அந்த நபரின் வாழ்க்கை தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தவும், உறவுமுறைகளை நிரூபிக்கவும் உதவக்கூடிய ஆதாரங்களாகவும் இந்த விவரங்கள் அமைகின்றன.